சதீஷ் ராமகிருஷ்ணன் அவர்கள் பெயர் பெற்ற ஹாலிவுட் அனிமேஷன் கலைஞர் சாமி பேசியின் அசோசியேட் ஆவார். சதீஷ் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த படங்களுக்கு இசை அமைத்து எடிட்டிங் வி எஃப் எக்ஸ் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இந்த இரு படங்களையும் இணைந்து தயாரித்த ஆர் ஆர் கிரியேஷன் நிறுவனர் திரு ரவி சின்னராஜ் பேசுகையில் மிகுந்த ஆர்வத்துடனும் பொருட் செலவோடும் சமுதாய நலன் மற்றும் இயற்கை நலன் கருதியும் தங்கள் குழு அன்பர்களுடன் இணைந்து அரும்பாடு பட்டு இந்த திரைப்படங்களை உருவாக்கினோம் என்று கூறினார். இதற்கு மக்களுடைய ஆதரவும் ஊடக நண்பர்களுடைய ஆதரவும் வேண்டுமென்றும் கூறினார்.