கடந்த சில வருடங்களாக விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதல் இந்திய திரையுலகினரால் கிசுகிசுக்கப்பட்து வந்த நிலையில்,இருவரும் தங்களது காதலை ரகசியமாக அரங்கேற்றி வந்தனர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், இவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வருகிறது.இது குறித்து சம்பந்தப்பட்ட ஜோடியின் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படாத நிலையில், இந்த ஜோடியின் திருமண வரவேற்பு பத்திரிக்கை ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.அதில், “ஒரு சிறப்புச் செய்தியை பகிர்ந்து கொள்ளவும், எங்கள் வாழ்வில் ஒரு பெரிய தருணத்தில் உங்களை பங்கேற்க அழைக்கவும் இதை நான் எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன், 26.02.26 அன்று எனக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இது ஒரு சிறிய மற்றும் நெருக்கமான நிகழ்வாக நடக்க இருக்கிறது. எங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை நாங்கள் தொடங்குவதையும், இந்த இணைப்பை எங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்தவர்களுடன் கொண்டாட்டங்களை, நினைவுகளையும் உருவாக்குவது எங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். உங்கள் வருகையும் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வை எங்களுக்கு இன்னும் சிறப்பானதாக மாற்றும். எங்கள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு எங்களை ஆசீர்வதிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.