திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது.
நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:
“ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் கருத்துடன் பார்வையாளர்கள் இணைந்து, தங்கள் சொந்த அனுபவமாக இந்த கதையை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.”
அதிதி ராவ் ஹைதரி கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் மேலும் பரந்த பார்வையாளர்களை இந்த படம் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பார்வையாளர்களை கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளை கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை.”
இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையை சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது ZEE5 இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.