நடிகர் விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது அந்த விவாகரத்து மனுவில், “தனது கணவரான விஜய் பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் என்றும்,. அதனை தான் கண்டுபிடித்த பிறகு,கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் நடிகையுடன் அந்த உறவை தொடந்தார். இதனால் நான் விஜய்யால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். இதனால் எனக்கு தீராத மன உளைச்சல் ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம் இது எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். மேலும் .சம்பந்தப்பட்ட நடிகை. விஜய்யுடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அவரே சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது இரு குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.” என்றும் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.அரசியலில் இறங்கியுள்ள விஜயை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர் .இந்த விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.