திரிஷா போட்ட அதிரடி பதிவு!

நடிகர் விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது அந்த விவாகரத்து மனுவில், “தனது கணவரான விஜய் பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் என்றும்,. அதனை தான் கண்டுபிடித்த பிறகு,கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் நடிகையுடன் அந்த உறவை தொடந்தார். இதனால் நான் விஜய்யால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். இதனால் எனக்கு தீராத மன உளைச்சல் ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 2021-ம் ஆண்டுமுதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம் இது எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். மேலும் .சம்பந்தப்பட்ட நடிகை. விஜய்யுடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அவரே சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது இரு குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.” என்றும் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.அரசியலில் இறங்கியுள்ள விஜயை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர் .இந்த விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், நேற்று மாலை சென்னை திருவான்மியூரில் பிரபல படத்தயாரிப்பளார் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு விஜய்யும் திரிஷாவும் இருவரும் ஒன்றாக ஒரே காரில் ஜோடியாக தம்பதிகள் போல, ஒரே நிறத்தில் பட்டு உடைகள் அணிந்து ஒரே காரில் வந்து திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றனர்.இது பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் உலகம் முழுவதும் பரவின. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதோடு தற்போது வரை . பேசுபொருளாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது திருமணத்துக்குச் சென்று வந்த அதே காஸ்ட்யூமில் எடுத்த புகைப்படத்துடன் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில்,, “எப்போதும் எனக்கு உறுதுணையாக (உதவியாக) இருப்பதற்கு மிக்க நன்றி!” என்பதை குறிக்கும் வகையில் “Thank you for always being my go-to people” என குறிப்பிட்டு அதனுடன் தனது அலங்காரத்துக்கு உதவிய நபர் மற்றும் நிறுவனங்களின் பெயரையும் டேக் செய்துள்ளார்.