நடிகர் ராஜேந்திர பிரசாத் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்! நடிகர் விஷால் பரபரப்பு அறிக்கை!!

சமீபத்தில்  ஐதராபாத்தில்நடந்த கலா பிரபூர்ண காந்த ராவ் தேசிய விருது வழங்கும் விழாவில், எம்ஜிஆரையும் காந்த ராவையும் பிரபல தெலுங்கு நடிகரான ராஜேந்திரபிரசாத்  ஒப்பிட்டு,பேசுகையில்,’காந்தாராவ் படங்களைப் பார்த்து தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர் பயப்படுவார்’ என்றும்,மேலும்  எம்ஜிஆர் குறித்து சில அவதூறான கருத்துக்களை  தெரிவித்ததாகவும்  கூறப்படுகிறது. இவ்விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இது குறித்த வீடியோ இணையத்திலும்  வைரலாக பரவியது   ராஜேந்திர பிரசாத்தின் கருத்துக்களுக்கு பலரும் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர் .இந்நிலையில்,நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால், இவ்விவகாரத்தில் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு   உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்  என்றும் குறிப்பிட்டு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த அறிக்கையில் விஷால் கூறியுள்ளதாவது,“நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய, பாராட்டிய காணொளி கண்டேன். ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது. திறனை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் தாங்கள் மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆரை  கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது எனக்கு அதிர்ச்சியூட்டும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது எனக்கு மட்டுமல்ல. இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல… உங்கள் சகாக்களே புண்பட்டு பேசிய ஒலி செய்திகள் அனுப்பியுள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது. நமக்குள் அதாவது தமிழ், தெலுங்கு சினிமா துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்துகொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது. நடிகர்கள் இயக்குனர்கள் இசை விற்பன்னர்கள் என எல்லாரையும் என். டி.ஆர் , ஏ.என்.ஆர், எஸ் வி ரங்காராவ், சாவித்திரி, சாராதாம்மா, வாணிஸ்ரீ என  பட்டியல் நீளும்  நடிகர்களை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக போற்றுகிறோம்.
திரு எம் ஜி ஆர் அவர்கள், வெறும் நடிகர் மட்டும் அல்ல. தமிழகத்தை ஆண்ட தலைவரும் கூட  அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமை.  என்.டி ராமாராவ் கட்சி தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் ,எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்திருக்கிறார். நான் இந்த விவகாரத்தை  நீட்டிக்க விரும்ப வில்லை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவனாக மட்டுமல்ல. ஒரு சினிமா காரனாக உங்களிடமிருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். அது கட்டாயப்படுத்துதல் காரணமாக இல்லாமல் உங்கள் உள் மனதில் இருந்து அந்த  மன்னிப்பு வரவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு நிறைவு செய்வீர் என்றே நம்புகிறேன்.” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்