இதனை விஜய் சேதுபதியும் உறுதி செய்து இருந்தார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் சேதுபதியுடன் , சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாகவும்,இப்படத்தை லைகா உடன் இணைந்து இயக்குனர் மணிரத்னம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார், மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி பிரிகிறது என்றும் தகவல்கள் பரவி வந்த நிலையில், வழக்கம் போலவே ஏ ஆர் ரஹ்மான் தான் இப்படத்திற்கும் இசையமைப்பாளர் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
1992-ல் ‘ரோஜா’ படம் மூலம் இவர்களின் கூட்டணி தொடங்கி,தொடர்ந்து, ‘பம்பாய்’, ‘திருடா திருடா’, ‘தில் சே’, ‘அலைபாயுதே’, ‘ஆய்த எழுத்து’, ‘குரு’, ‘ராவணன்’, ‘ஓகே கண்மணி’, ‘காற்று வெளியிடை’, ‘செக்கச்சிவந்த வானம்’, மற்றும் ‘பொன்னியின் செல்வன் 1 & 2’ என பல படைப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது