மீண்டும் இணைந்த மணிரத்னம்-ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி!

கமல்ஹாசனின் ‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல்  படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,  விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தான் இயக்க உள்ளார் என மணிரத்னம் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது.

இதனை விஜய் சேதுபதியும் உறுதி செய்து இருந்தார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில்  விஜய் சேதுபதியுடன் , சாய் பல்லவி ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாகவும்,இப்படத்தை லைகா உடன் இணைந்து இயக்குனர் மணிரத்னம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார், மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி பிரிகிறது  என்றும்  தகவல்கள் பரவி வந்த நிலையில், வழக்கம் போலவே ஏ ஆர் ரஹ்மான் தான் இப்படத்திற்கும்  இசையமைப்பாளர் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

1992-ல் ‘ரோஜா’ படம் மூலம் இவர்களின் கூட்டணி  தொடங்கி,தொடர்ந்து, ‘பம்பாய்’, ‘திருடா திருடா’, ‘தில் சே’, ‘அலைபாயுதே’, ‘ஆய்த எழுத்து’, ‘குரு’, ‘ராவணன்’, ‘ஓகே கண்மணி’, ‘காற்று வெளியிடை’, ‘செக்கச்சிவந்த வானம்’, மற்றும் ‘பொன்னியின் செல்வன் 1 & 2’ என பல  படைப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது