இந்நிலையில் கருத்து வேறு பாடு காரணமாக கடந்த 2016 செப்டம்பரில் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.இந்நிலையில் இயக்குனர் பிரியதர்சன் தனது முன்னாள் மனைவியும், நடிகையுமான லிஸ்ஸியுடன், விவாகரத்து பெற்று சுமார் ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில்,தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இது பலருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
சமீபத்தில் நடிகை லிசி , தனது சமூக வலைதள பக்கத்தில், முன்னாள் கணவர் பிரியதர்ஷன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, அதற்கு கேப்ஷனாக ‘இந்தப் புகைப்படங்கள் சென்னையில் உள்ள எனது ‘லீ மேஜிக் லேண்டர்ன்’ ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டன. மகேஷ் நாராயணன் இயக்கிய, மம்மூட்டியும் மோகன்லாலும் இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ திரைப்படத்தின் குரல் பதிவிற்காக மம்மூட்டி அங்கு வந்திருந்தார்.எங்களது ஸ்டுடியோவிற்கு வருகை தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி ‘ என குறிப்பிட்டுள்ளது , மீண்டும்அவர்கள் இருவரும் இணைந்ததை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் மலையாளத் திரைப்படமான ‘பேட்ரியாட்’-இன் குரல் பதிவிற்காக, ‘லெ மேஜிக் லேண்டர்ன்’-ஸ்டுடியோவில் ‘டப்பிங்’ பணியில் இருந்த நடிகர் மம்மூட்டி இருவரையும் அழைத்து, மீண்டும் உங்களை ஒன்றாக காண்பதில் பெரிய மகிழ்ச்சி’ என வாழ்த்தியுள்ளார் .இவர்கள் இருவரும் மீண்டும் இணைவதற்கு முக்கிய காரணம் இவர்களின் மகள் கல்யாணியும் சித்தார்த்தும் தான் என்கிறார்கள்.
இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளது குறித்து இயக்குனர் பிரியதர்சன் கூறியுள்ளதாவது, “திருமண சான்றிதழை தவிர, நாங்கள் அதே வாழ்க்கையைத்தான் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்”என கூறியுள்ளார்.