எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கனா, நெஞ்சுக்கு நீதி படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான் தூத்துக்குடி குலுமணாலி மும்பை பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள் அசர்பைஜான் படமாக்கப்பட்டுள்ளன. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ வெங்கடேஷ் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.