இந்த சந்திப்பில் எடிட்டர் யூனியன் தலைவர் கோபி பேசுகையில்,”எங்கள் மீது வைக்கப்படுகிற நம்பிக்கைதான் இங்கே ரொம்ப முக்கியம். அதன் மூலமாகத்தான், அடுத்தடுத்த வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்கும்.இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ் இதுவரைக்கும் 25-க்கும் மேற்பட்ட படங்கள் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படத்துக்கு எப்படி இதுபோல் நடந்தது என யூகிக்க முடியாதபடி இருக்கிறது. ரீவொர்க் செய்யலாம் என்று எடுத்துக்கொண்ட வெர்ஷன்தான், இப்போது இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.மற்றபடி, இதை எடிட்டர் செய்திருப்பார் என்று இணையத்தில் சில தகவல்கள் பேசப்படுகின்றன. ஆனால், அது உண்மை கிடையாது. எடிட்டரிடம் தெளிவான படத்தின்பிரிண்ட் இருக்கும்.அவர் நினைத்திருந்தால், அதையே வெளியிட்டிருக்கலாம். எதற்காக அவர் ‘எடிட்டர் ரெஃபரன்ஸ்’ எனக் குறிப்பிட்ட பதிப்பை கசியவிட வேண்டும்? இதில் எடிட்டரின் மேல் குற்றம் சொல்வது தவறான விஷயம்” என்றார்.
இயக்குனர் செல்வ மணி பேசுகையில்,”ஜனநாயகன் படம் கசிந்தது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஜனநாயகன் லீக் விவகாரத்தில் போலீஸ் எந்த விசாரணையும் செய்யவில்லை என்று நினைத்திருந்தோம், ஆனால், குற்றவாளிகளைக் கண்டறிய போலீசார் 24 மணி நேரமும் கடுமையாக வேலை பார்த்து வருகிறார்கள் . விசாரணையில் குற்றவாளிகளை போலீசார் நெருங்கிவிட்டனர் என்றும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்