சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக… டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு திரிஷாவின் வீட்டில் போலீசார். பாம் ஸ்குவாட் டீம் மற்றும் மோப்ப நாய் உதவிகளுடன் சோதனையிட்டதில் அவரது வீட்டில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு புரளி கிளப்பிய மர்ம ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை திரிஷாவின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.