பின்னர் முழு படமும் வெளியானதாக தகவல்கள் வெளியாகின.இது குறித்து தயாரிப்பு தரப்பு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் உதவி படத் தொகுப்பாளர் உட்பட மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் எடிட்டர் பிரதீப் ராகவை இந்த விவகாரத்தில் அவருக்கும் பொறுப்பு உண்டு எனக்கூறி அதிரடியாக இடைக்கால நீக்கம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்த அறிக்கையில் ,கூறப்பட்டுள்ளதாவது,””படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ், தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது.மேலும் “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் E ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
நடிகர் விஷால் நடித்த கதகளி படத்தை இயக்கி படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரதீப் ராகவ். டிக் டிக் டிக், கோமாளி, லவ் டுடே, ஸ்டார், டிராகன், லீடர், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார்.