பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக் உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.
ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.
பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.