இந்நிலையில், அந்த வெற்றிப் படத்தின் அடுத்த அத்தியாயமாக “ரேனிகுண்டா – 2” திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்குவதோடு தயாரிக்கவும் செய்கிறார். இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் யுகபாரதி மற்றும் விவேகா எழுதியுள்ளனர்.
இப்படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷாமி திலகன், நிஷாந்த், கனிஃபா, தமிழ்செல்வம், சுந்தீப், ஆஹானா, அருண், ஜெசிந்தா, வேலா ராமமூர்த்தி, ஹரீஷ் பேரடி, சுஜாதா மற்றும் சுர்பி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.