‘மா இண்டி பங்காரம்’ தெலுங்கு மொழியில் இப்படத்தை நடிகை சமந்தா தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படமே தமிழில் டப்பிங்க் செய்யப்பட்டு எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
அமைதியான பெண்ணாகவும், வானில் பறந்த படி எதிரிகளை பந்தாடும் பெண்ணாகவும் இறுவேறு நடிப்பினில் ரசிகர்களை தன்பக்கம் இழுக்கிறார். சமந்தாவின் சண்டைக்காட்சிகளை வெகுவாக பெண்கள் ரசிக்கிறார்கள். நட்சத்திரங்கள் நிரம்பி வழியும் வழக்கமான அக்மார்க் தெலுங்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. பூஜை புணஸ்காரம், ஒரு சின்ன சென்டிமென்ட் அடிதடி என பக்கா கமர்ஷியல். அது சமந்தாவின் சிறப்பான பங்கு.
சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலேவிற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ஹீரோ, ஹீரோயின் இரண்டுமே சமந்தா என்பதால் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் அவர் நடித்த காட்சிகளில் குறைவில்லாமல் நடித்துள்ளார். ஆனால் தமிழ் ரசிகர்கர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கிறார்.
மற்றபடி குல்ஷன் தேவய்யா, ஆனந்த், கெளதமி, பாட்டி ஸ்ரீ லக்ஷ்மி, சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர். சமந்தாவின் தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா கொஞ்சம் கூடுதல் கவனம் பெறுகிறார்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் சிறப்பாக இருக்கிறது.
அரசியல், நக்சல் இவற்றின் பின்னணியில் ஒரு பெரிய குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பைப்பெற முயற்சிக்கும் மருமகள் என ஒரு ஜனரஞ்சகமான படத்தினை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். கதையாசிரியர்கள் ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மரிம்கண்டி இருவரும். அதற்கு தன்னால் முடிந்தவரை ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இயக்கியிருக்கிறார், இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.
மொத்தத்தில், ‘எங்கள் தங்கம்’ அக்மார்க் தெலுங்கு ரசிகர்களுக்கான பொதுழுபோக்கு படம்!