சமீபத்தில் இந்தபடத்தின் படபூஜை நடைபெற்றது , அதனை தொடர்ந்து, இன்று அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே துவங்கியது. ஜினிமா மீடியா எண்டர்டெய்ண்மெண்ட் சேர்மன் , தினேஷ்ராஜ் மற்றும் பா.இரஞ்சித் கிளாப் போர்டு அடித்து துவங்கிவைத்தனர்.
பவிஷ், மற்றும் மைம் கோபி இருவரும் நடிக்கும் முதல் காட்சியை தனது இணை இயக்குனருக்காக ஆக்சன் சொல்லி துவங்கி வைத்தார் பா.இரஞ்சித். வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் தென்னிந்திய மானிலங்களில் நடைபெறவிருக்கிறது.