Monday, August 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

admin by admin
August 24, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

நடிகை கைரா வாசுதேவன்- பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான ‘கலீஃபா’ திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏராளமான ரசிகர்களால் இணையத்தில் தேடப்படும் பிரபலமாக மாறி இருக்கிறார் நடிகை கைரா வாசுதேவன். இந்த தருணத்தில் நடிகை கைரா வாசுதேவன் மலையாளத்தில் அறிமுகமான ‘கலீஃபா’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். 
இது தொடர்பாக நடிகை கைரா வாசுதேவன் பேசுகையில், 
” பிருத்விராஜ் சுகுமாரன் – இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர்  ஜினு வி.ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து எனது முதல் மலையாள படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து அறிமுகமாவதால் மிகுந்த அழுத்தம் இருந்தது. அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்ததுடன் என் மீது பெரிய எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தனர்.
இயக்குநர் -பிருத்விராஜ்- ஜினு மற்றும் ஒட்டுமொத்த படக் குழுவினரும் என்னை மிகவும் இயல்பாகவும், பாதுகாப்பாகவும் உணர வைத்தனர். படம் முழுவதும் எனக்கு வழிகாட்டினர். அதற்காக நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். 
‘கலீஃபா’ படப்பிடிப்பு தளம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் இடமாக அமைந்தது. குறிப்பாக திரைப்பட தயாரிப்பின் தொழில்நுட்ப அம்சங்களையும், நடிப்பின் நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள இயக்குநர் வைசாக் உதவினார்.‌
‘கலீஃபா’ படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தன. லென்ஸ்( Lens)  மற்றும் பிரேமிற்கு( Frame ) ஏற்ப எவ்வாறு நடிப்பது என்பது முதல் லைட்டிங் ( Lighting) எவ்வாறு செயல்படுகிறது என்பது வரை… தொழில்நுட்ப ரீதியாக வைசாக் சார் எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் நான் புதிதாக ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டேன்.
இந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். முதல்முறையாக சண்டைக் காட்சியில் நடித்த போது நான் மிகவும் பதற்றம் அடைந்தேன். ஆனால் இயக்குநர் வைசாக் சார்..! நான் பாதுகாப்பாகவும், ஒரு குடும்ப சூழலில் இருப்பது போலவும் உணர்வதை உறுதி செய்தார். அந்த செயல்முறை முழுவதும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்து, எனது பதற்றத்தை விலக உதவினார்.‌
பிருத்விராஜுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.  அவர் அன்பான மற்றும் நம்பிக்கையூட்டும் ஒரு சக நடிகர்.‌ அவர் மிகவும் கனிவான- ஆதரவான- சக நடிகர். அவர் மிகவும் அன்பாகவும்… வரவேற்கும் மனப்பான்மையுடன் இருந்தார். அவருடன் ஒட்டுமொத்த குழுவும் இணைந்து பணியாற்றியது. … உண்மையிலேயே மகிழ்ச்சியான அனுபவம். பிருத்விராஜுடன் இணைந்து எனது திரை பயணத்தை தொடங்கியதை நான் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இத்தகைய வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை .அதனால் என்னுடைய முழு ஆற்றலையும், 200 சதவீதம் வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு நிறைவான நியாயம் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 
மலையாளத் திரைப்படத் துறையும், கேரளாவும் என் இதயத்தில் மிக சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. நான் எத்தனை மொழிகளில் பணியாற்றினாலும் மலையாளத் துறையிலும் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்வேன். மலையாள திரையுலகம் எனக்கு ஒரு வீடாக மாறிவிட்டது. குறிப்பாக எனது முதல் படம் இங்குதான் வெளியாகிறது என்பதால்… இந்த உணர்வு பூர்வமான ஆழத்தைக் கொண்டிருக்கிறது. மலையாளத் திரையுலகம் என்னை தேர்ந்தெடுத்ததுடன் என் மீது அளவற்ற அன்பையும் அளித்தது. மீண்டும் மீண்டும் இங்கு வந்து பல திரைப்படங்களில் பணியாற்றவே நான் விரும்புவேன். இது எனக்கு ஒரு வீடு போன்றது. 
நான் இப்போது வேறொரு மாநிலத்தில் இருப்பதாகவே உணரவில்லை. கலீஃபா படக் குழுவினர் எனக்கு அத்தகைய உணர்வை ஏற்படுத்தித் தந்தனர். அதற்காக நான் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன்” என்றார்.
admin

admin

Related Posts

‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

by admin
August 24, 2026
‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

by admin
August 24, 2026
ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’  தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!
News

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
August 24, 2026
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!
News

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

by admin
August 24, 2026
‘அன்பே டயானா’… ஆகஸ்ட் 28 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் டிஜிட்டல் பிரீமியர்!
News

‘அன்பே டயானா’… ஆகஸ்ட் 28 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் டிஜிட்டல் பிரீமியர்!

by admin
August 23, 2026

Recent News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

August 24, 2026
ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’  தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

August 24, 2026
பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த  பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

August 24, 2026
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

August 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?