
உலகத்தின் துயரமாக இருக்கிறது சீனா.
180 நாடுகளில் பரவி இருக்கிற கொரானா கொடிய நோயின் ஊற்றுக்கண் சீனாதான்.!
சீனாவின் வுஹான் மாநிலத்திலிருந்து உலகத்தின் பல பகுதிகளுக்கு விரைவாக பரவி வருகிற இந்த நோய்க்கு 60 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கிறார்கள்.
இந்த நோயை முதலில் கண்டறிந்தவர் வுஹான் மருத்துவமனையின் அவசரப்பிரிவுக்கு இயக்குநராக இருந்த டாக்டர் ஐ ஃ பென் என்பவராவார் .
காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த ஒரு நோயாளியை இவர்தான் சோதனை செய்திருக்கிறார். 2019-ஆம் ஆண்டிலேயே கண்டறியப்பட்ட கொரானா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நோயைப் பற்றி அரசு ஊடகத்துக்கு விரிவாக பேட்டி அளித்த டாக்டர் ஐ ஃ பென் அந்த பேட்டிக்குப் பின்னர் ஆளை காணவில்லை.அவரது பேட்டியும் வெளியாகவில்லை.
சீன அரசு எதற்காக மறைக்கிறது என்பது தெரியவில்லை. கொரானா பற்றிய உண்மையான பலவிவரங்களையும் இறந்து போனவர்களின் உண்மையான எண்ணிக்கையையும் அந்த அரசு மறைத்திருப்பதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன












