
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் தற்போது தேறி வருவதாக சொல்கிறார்கள். நல்ல மனிதர். அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள் .நேற்று இரவு இசைஞானி இளையராஜா மிகவும் உருக்கமுடன் “எழுந்து வா பாலு” என்று வெளியிட்டிருந்த வீடியோ எல்லோரையும் கலங்கடித்துவிட்டது.
அவர்கள் இருவரும் தொடக்க காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள். சினிமாவுக்கு வந்த பின்னர் அந்த நடப்பு மேலும் இறுகியது. அவ்வப்போது சண்டைகள் வந்தாலும் அது கணவன் -மனைவி இடையே வருகிற பிணக்காகவே இருந்தது. ராஜாவை அவன் இவன் என்று உரிமையுடன் பேசுகிற ஒரே மனிதர் பாலுவாகத்தான் இருக்க முடியும். பாலுவுக்கு கொரானா என்றதும் துடித்துப்போனவர் ராஜா. “15 நாட்களாகியும் இவ்வளவு டாக்டர்கள் இருந்தும் என்ன செய்கிறார்கள் ?”என்று கேட்கிறார் ராஜா.
ராஜாவின் வீடியோ பார்த்ததும் துடித்துப்போன இசை அமைப்பாளர் “கண்ணீர் வந்து விட்டது “என்று உருகுகிறார் இசை அமைப்பாளர் எஸ்,.தமன்
“வீடியோவையும் ராஜா சாரின் உண்மையான வார்த்தைகளையும் கேட்ட பிறகு கண்ணீர் வந்து விட்டது! அவர்கள் தங்கள் நட்பை மிகவும் மதித்தனர்.. அப்படிதான் ஆயிரக்கணக்கான பாடல்களால் அவர்கள் நம் இதயத்தை வென்றார்கள்.. நான் பிரார்த்தனை மற்றும் ஆழமான நட்பை நம்புகிறேன். உரிமையுடன் உருக்கமுடன் பிரார்த்திப்போம் !! என குறிப்பிட்டுள்ளார்.












