தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான, கடந்த 1990-களில் கட்டப்பட்டு,சென்னை கோடம்பாக்கத்தின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ள ராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட உள்ளதாகக் கோலிவுட் மற்றும் ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் பரவி வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, பரந்து விரிந்த பரப்பளவைக் கொண்ட இந்த வளாகத்தை நவீன உள்கட்டமைப்பு, சொகுசு அறைகள் மற்றும் சர்வதேச தரத்திலான உணவக வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலாக மறுவடிவமைப்பு செய்வதற்கான பூர்வாங்க நகர்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கான விரிவான திட்ட வரைவுகள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்தோ அல்லது அவரது குடும்ப நிர்வாகத் தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.