இந்நிலையில், கோவாவில் உள்ள தனது வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நடிகர் நானா படேகரை அவரது குடும்பத்தினர் மீட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் குழு,தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை சிபிஆர் சிகிச்சை அளித்து தீவிரமாக முயற்சி செய்த போதிலும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5:20 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக மருத்துவ-சட்ட ரீதியான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் உடற்கூராய்வு நடத்தப்படும் என்று மணிப்பால் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சேகர் சல்கர் தெரிவித்தார். நானா படேகர் மறைவு திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகைக் கடந்து, மகாராஷ்டிரா மாநில விவசாயிகளுக்கு அவர் ஆற்றிய உதவிகளும், கார்கில் போரின்போது செய்த தன்னார்வ பணிகளும் அவரின் கடமை உணர்வு பற்றி எப்போதும் பறைசாற்றும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
இந்தியத் திரைப்பட உலகின் பிரபலமான, பன்முகத்திறமை கொண்ட பாலிவுட் மற்றும் மராத்தி நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் நானா படேகர். மஹாராஷ்டிராவில் கடந்த 1951ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்தவர் நானா படேகர்.இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்துள்ளார் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின்நடிப்பில் வெளியான காலா படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உதவுவதற்காக ‘நாம் பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தவர். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.இவர் 3 தேசிய விருதுகளை வென்றவர்; இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.பாட்ஷாலா இந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற முழு சம்பளத்தையும் ஐந்து வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட ராஜ் கபூர் விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சம் பரிசுத்தொகையையும் மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக முழுமையாக நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது