டிசிபி ட்ரீம் ஹவுஸ் மற்றும் சிம்புதேவன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள புதிய படம், ‘நவோரியா’. இப் படத்தில் விமல், அன் ஷீத்தல், ஆரி அர்ஜுன், வடிவுக்கரசி, பாலாஜி சக்திவேல், பாலசரவணன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், தம்பி ராமையா, கஸ்தூரி, அப்புகுட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை எம்.சுகுமாரும், படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங்கும் மேற்கொள்ள டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம்வரும் டிசம்பர் 18 அன்று வெளியாகிறது. இப்படம் குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறுகையில், நவோரியா என்பது இடத்தோட பேரு. ஒரு மலையோட பேரு . இந்த கதைக்கு நவோரியா மலை ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதனால இந்தப்படத்துக்கு இந்த தலைப்பை சூட்டியுள்ளோம்
.இப்படத்தில்,விமல் ‘ஆதி’ என்ற கதாபாத்திரத்திலும், அன்ஷீத்தல் ‘அபி’ என்ற கதாபாத்திரத்திலும், ஆரி அர்ஜுனன் ‘கவுதம் ராஜேந்திரன்’ என்ற வில்லன் கதாபத்திரத்திலும், நிழல்கள் ரவி சித்தர் வேடத்திலும் நடித்துள்ளனர்.சென்னையில் இருந்து திருநெல்வேலி அருகே உள்ள நவோரியா என்ற சொந்த கிராமத்துக்கு செல்லும் 4 நண்பர்கள் அங்குள்ள நவோரியா மலையில் உள்ள ரகசிய குகைக்கு செல்கிறார்கள் . ஆனால் அவர்கள் அனைவரும் அங்கு நடக்கும் மரண விளையாட்டில் சிக்கிக்கொள்கிறார்கள்.அவர்கள் அனைவரும் உயிருடன் குகையை விட்டு வெளியேற வேண்டுமென்றால் அந்த மரண விளையாட்டுக்கான புதிரை விடுவிக்க வேண்டும். .அங்கு நடந்தது என்ன ?அந்த குகையில் இருந்து அவர்கள் வெளியே வந்தார்களா? இல்லையா? அவர்கள் எதை தேடி அந்த ரகசிய குகைக்குள் சென்றார்கள்? என்பது தான் இப்படத்தின் பேண்டஸி கலந்த நகைச்சுவை திரில்லராக, குழந்தைகளுக்கான சிறந்த படமாகவும் குடும்ப பொழுதுபோக்குப் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 60 நாட்களுக்கும் மேலாக நடத்தினோம். இதனைத் தொடர்ந்து, நவோரியா குகைக்கான பிரமாண்ட அரங்கை சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் அமைத்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது” என்கிறார்..