நடுத்தர வாழ்வின் அழுத்தங்களாலும் கணவனின் அலட்சியத்தாலும் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழும் லட்சுமி என்கிற பெண், தினசரி வேலைக்குச் சென்றுவரும் ரயிலில் சந்திக்கும் கதிர் என்கிற இளைஞனுடன் ஒருநாள் இரவைக் கழிப்பதுதான் லட்சுமி குறும்படத்தின் கதை.இந்தப் படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தது.இந்தப் படத்தில் பாரதியாரின் கவிதை ஒன்றைப் பயன்படுத்தியிருப்பதை வைத்து, பாரதி இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகப் பலர் பொங்கி எழுந்தனர். ஒரு குறிப்பிட்ட காட்சி இளைஞர்களிடையே வைரலானது.