“செக்கச்சிவந்த வானம்”

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.
“செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
இசை – A.R.ரஹ்மான்,ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
எழுத்து – மணி ரத்னம் & சிவா அனந்த்
தயாரிப்பு – மணி ரத்னம் & சுபாஸ்கரன்
இயக்கம் – மணி ரத்னம்
Comments (0)
Add Comment