பாலைவனச்சோலையாக ஸ்டண்ட் யூனியன்!

கடுங்கோடையிலும் சில நேரம் மழை பொழியும்! சுத்தமாக  முடங்கிக்  கிடக்கும் தமிழ்த் திரை உலகில் விழா நிகழ்ச்சிகளும் அரிதிலும் அரிதாகி விட்டது. இத்தகைய சூழ்நிலையில்தான் ஸ்டண்ட் யூனியன் தினம்  கொண்டாடப்படுகிறது. வருகிற 1 7 -ம் தேதி கொண்டாடி மூத்த வீரர்களை கவுரவிக்கிறார்கள் .

ரத்ததானம்,கண்தானம் ஆகிய நற்பணிகளும் நடக்கின்றன. தென்னக  ஜேம்ஸ்பாண்ட் அமரர் ஜெய்சங்கரின் புதல்வர் டாக்டர் விஜய சங்கர் ரத்ததான முகாமை நடத்துகிறார்.

கலைப்புலி தாணு, விஜயசேதுபதி ,விக்ரமன், செல்வமணி ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாக யூனியன் செயலாளர் செல்வம் அறிவித்திருக்கிறார்.

Comments (0)
Add Comment