கடுங்கோடையிலும் சில நேரம் மழை பொழியும்! சுத்தமாக முடங்கிக் கிடக்கும் தமிழ்த் திரை உலகில் விழா நிகழ்ச்சிகளும் அரிதிலும் அரிதாகி விட்டது. இத்தகைய சூழ்நிலையில்தான் ஸ்டண்ட் யூனியன் தினம் கொண்டாடப்படுகிறது. வருகிற 1 7 -ம் தேதி கொண்டாடி மூத்த வீரர்களை கவுரவிக்கிறார்கள் .
ரத்ததானம்,கண்தானம் ஆகிய நற்பணிகளும் நடக்கின்றன. தென்னக ஜேம்ஸ்பாண்ட் அமரர் ஜெய்சங்கரின் புதல்வர் டாக்டர் விஜய சங்கர் ரத்ததான முகாமை நடத்துகிறார்.
கலைப்புலி தாணு, விஜயசேதுபதி ,விக்ரமன், செல்வமணி ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாக யூனியன் செயலாளர் செல்வம் அறிவித்திருக்கிறார்.