“மூடிக்கிடந்தாலும் பரவாயில்லை ,கவலையும் கிடையாது.நீ கொடுத்து நான் படத்தை ஓட்டமாட்டேன்” என்று வம்புக்கு அலைகிறார்களோ , என்னவோ! தியேட்டர்காரர்களின் போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது.
தியேட்டர்காரர்கள் வைத்ததுதான் சட்டம் ,ஓடுகிற படத்தைக்கூட அவர்களால் தூக்க முடியும் என்கிற நிலைமைதான் இருந்தது. குறைந்த பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களை கதற விட்டார்கள் என்று கூடசொல்லப் பட்டது.இடையில் ‘கியூப் ‘சிக்கல்.இதெல்லாம் சேர்த்துதான் திரை உலக வேலை நிறுத்தத்துக்கு வழி வகுத்தது.
என்னென்ன சிக்கல்கள் இருந்ததோ அதை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிப்பாளர்கள் சங்கம் நீக்கி வந்தது.தியேட்டர்களுக்கு சங்கமே ப்ரோவைடர்களை கொடுக்கும் அளவுக்கு தயாராக இருப்பதைப் பார்த்ததும் தியேட்டர் சங்கத்தினர் தயாரிப்பாளர்கள் சங்கம் தனி உரிமை கொண்டாடுவதாக புகார் செய்திருக்கிறார்களாம்.
அசல் முதலாளித்துவம் தலை தூக்குகிறதா?
சிரிக்கிறார் சங்கத் தலைவர் விஷால்.!
“நாங்கள் படம் தருவதற்கு தயார்! நாங்களே சொந்தமாக ‘மாஸ்டரிங்’ யூனிட் வைத்திருக்கிறோம்.தியேட்டர்காரர்களுக்கு கொடுப்போம். படத்தை எங்களிடம் வாங்குவதா கூடாதா என்பதை முடிவு செய்ய வேண்டியது தியேட்டர்காரர்கள் .
ஒரே ஒரு ஆளிடம்தான் வாங்குவோம் என்று சொல்வதுதாம் தனி உரிமை.படங்கள் கொடுப்பதற்கான புரோவைடர்ஸ் எங்களிடம் இருக்கிறது. கொடுக்கிறோம். இதிலென்ன தப்பு !” என்று கேட்கிறார்.