ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தினை தயாரிக்கிறார். எஸ்.கே.13 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று காலை சம்பிரதாய பூஜையுடன் துவங்கியது.
இப் படத்தை பற்றி தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறியதாவது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும்இயக்குனர் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும்.