கல்யாணக் கவலையே இல்லையா?

தபு …சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார் .அற்புதமான  நடிகை. வயது 46.

“வயதாகி விட்டது.வாலிபம் முதுமை பெறுகிறது. கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லையே ? கவலையே இல்லையா ? இன்னமும் சிங்கிள் தானா?” 

“எஸ். இன்னமும் நான் ஒற்றைப் பெண்தான்! அடுத்த கேள்வி?”

“ஒற்றைப் பெண்ணாகவே இருந்து விட்டோமே என்கிற வருத்தம்  இல்லையா?”

” எப்போதுமே இல்லை.”

“எதையோ மிஸ் பண்ணி விட்டோம் என்கிற வருத்தம் கூட இல்லையா?”

” இருக்க வாய்ப்பில்லை.!”

“ஏன்?”

“கல்யாணம் பண்ணினால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனையே இல்லாதிருக்கிறபோது அந்த பக்கத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்? மறுபக்கம் எப்படி இருக்கும் .இந்தப் பக்கத்தை விட சிறப்பாக இருக்குமா என்கிற கருத்துக்கு இடமே இல்லையே?”

“திருமணம் சுகமானதுதானே?”

” கல்யாணமே ஆகாதவளிடம் அது சுகமா சோகமா எப்படி இருக்கும் என்று கேட்டால்  என்ன பதில்  சொல்ல முடியும்?” 

“திருமணம் ஆகவில்லையே என்கிற வருத்தம் இல்லவே இல்லையா?”

“ம்ம்ம்ம்!” ( நெடிய மவுனம்.)

“ஒருபோதுமா?”

“இப்போது வரை!” என்கிறார் தபு.

அழுத்தமான பெண்.!