தனுசும் அரசியலுக்கு வருகிறார்!

“சுட்டகதைன்னு எவனும் சொல்ல முடியாது. அரசியலை வைத்து  ஆயிரம் கதைகள் பண்ண முடியும்கிறபோது எதுக்கு இன்னொருத்தன்  கதையை லாவணும்”என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் போல.

ஆளுக்காள் அரசியல் பண்ணும் போது ஆளுக்காள் அரசியல் படம் எடுக்கக்கூடாதா? 

ஏற்கனவே ‘ கொடி ‘ கட்டிய தனுஷ்  தற்போது மறுபடியும் அவதாரம்.! அதற்கு முன்னதாக இந்தியில் அரசியல் பிரவேசம் .ரஞ்சனா படம் எடுத்தவர் இரண்டாம் பாகம் எடுக்கிறார். அதில் தனுஷ் தனது அரசியலை காசியில் தொடங்குகிறாராம்.

யோசியுங்க பிரதர். காசி சரியான இடமா தெரியல!