நடிகர் சங்கத் தேர்தலில் கள்ள ஓட்டு! பிரபல நடிகரின் ஓட்டே திருடப்பட்டிருக்கிறது.

காலையில் மைக் மோகன் ஓட்டுப்போடவந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் ஓட்டுப் போட்டாரா,இல்லியா?

“இல்லை”என்கிறார்கள் சிலர்.

“அவர் போட்டு விட்டார் “என வேறு சிலர் சொல்கிறார்கள்.

“மோகனின் வோட்டை வேறு யாரோ போட்டுவிட்டார்கள் “என மற்றும் சிலர் சொல்கிறார்கள்.

அடப்பாவிகளா?

போனதடவையும் அவரால் ஓட்டுப்போடமுடிய வில்லை. எந்த பாவியோ போட்டுவிட்டான்.கடுமையான வாக்கு வாதம்  சண்டை நடந்து அதில் விஷாலே மூர்ச்சித்து விழுந்து விட்டார்.ஆம்புலன்செல்லாம் வந்தது.

இம்முறையும் அவருக்கு ஓட்டு இல்லியாம்.

அட கடவுளே…அவருக்கு போனைப் போடு 

“என்ன மோகன் ,இந்த வருசமும் அப்படியா?”

“என்ன பண்றது…என்னோட அட்ரஸ் ..என்னோட ஓட்டுன்னு சொல்லி ஒருத்தர் என் ஓட்டைப் போட்டுட்டு போயிட்டார். நீதிபதி கிட்ட சொன்னேன். என்ன உங்களுக்கே இப்படியா என சொல்லி விட்டு தனி கவரில் எனது வாக்குப்பதிவை குறித்துக் கொண்டு அனுப்பி விட்டார்.

இதைப் பற்றி நான் என்ன சொல்வது? நமக்குள் இப்படி நடந்திருப்பது கஷ்டமாகத்தான் இருக்கு. நான் இத பரபரப்பு செய்தியாக்க விரும்பல.பார்ப்போம்.எனது நோக்கமெல்லாம் கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்பதுதான்.!”என்றார் மோகன்.

கள்ள ஓட்டுநடிகர் சங்கத் தேர்தல்மோகன்