முதல் மந்திரிகள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

உணர்வு …சுமன் நடித்திருக்கிற படம்.

இந்த படத்தில் அவர் முதலமைச்சராக நடித்திருக்கிறார்.

“வாழ்க தமிழ்,வாழ்க தமிழ்நாடு, வாழ்க தமிழ்ச்சினிமா” என பேசத் தொடங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது.

பிற மாநிலத்தவர் என்றாலும் நமது மாநிலத்தில் வளர்ந்து சென்றவர்.  நன்றி மறக்காமல் இருக்கிறாரே !

“முதலமைச்சாராக இருந்தாலும் அவருக்கு இருக்கிற மேலிடத்து அழுத்தம், கட்சி அழுத்தம் ,ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு பின்னர் அவரே திரும்பப் பெறக்கூடிய நிர்பந்தம் இவைகளை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள் அவர்க்கு இருக்கிற சாதக பாதகங்களை சொல்லியிருக்கிறார்கள் ” என்றார். முப்படையைச்சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கு 120 ஏக்கரா நிலத்தை ஆந்திராவில் இலவசமாக சுமன் வழங்கி இருக்கிறார்.

உணர்வுசுமன்