“பிக் பாஸ் வீட்டை நொறுக்கு!”-இயக்குநர் அமீர் ஆவேசம்.!

அவ்வளவாக சுரத்து இல்லாமல் போய்க் கொண்டிருக்கிற  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவ்வப்போது ரசிக்க வைப்பது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் சேட்டைகளே.!

காதல் என்கிற பெயரில் வேப்பிலை அடிக்க வேண்டிய கேசாக இருப்பவர்கள் கவின்-லாஸ்லியா ஜோடியினர்.

பரிதாபத்திற்குரியவராக இருப்பவர் இயக்குநர் சேரன்.

நாய் மாதிரி  இவர் குரைத்தது அண்மைச் சோகம்!பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கண்ணியமான இந்த மனிதரை மிகவும் இழிவாக படம் பிடித்து காட்டியனார்கள் .சகித்துக் கொண்டுதான் உள்ளே இருக்கிறார் .

அவரது ரசிகர்களே “விடுங்கள் அனுபவிக்கட்டும்”என்று வெறுத்துப் போய் இருக்கிறார்கள். 

ஆனால் இயக்குநர் அமீர் மட்டும் கொதிகலனாகி விட்டார். எப்படி எங்கள் சேரனை இழிவு படுத்தலாம் என ஆவேசமாகி இருக்கிறார்.

கேப்டன் விஜயகாந்தின் திரை உலக வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். அவர் நடத்திவந்த படப்பிடிப்பு நிறுவனம் சார்பில் தற்போது “எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துப்பான்”என்கிற பெயரில் திரைப்படம் தயாராகி இருக்கிறது.

இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா பிரமாண்டமாக நடந்தது. விழாவில் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அமீர் ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

அறிமுக இயக்குநர்  கவிராஜ் இயக்கம் இந்த படத்தில் ஆரி,ஷாஸ்வி பாலா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

இயக்குநர் அமீர் பேசுகையில் சேரனுக்கு ஆதரவான கருத்துகளை அதிரடியாக பேசி இருக்கிறார்.

“சேரனை மிகப்­பெ­ரிய இயக்­கு­ந­ரா­கவேபார்த்­துக்­கொண்டு வருகிறேன்.

சேரன் முன்­னணிஇயக்­கு­நராக இருந்த ­போது, நான்
சினி­மாத்­து­றை­யில் காலடிஎடுத்து வைத்­தேன். அவ­ரு­டைய ‘ஆட்டோ­கி­ராஃப் ‘ படத்தை பார்த்து மெய்சிலிர்த்து போனேன். நான்அப்­படி பார்த்த சேரன் இப்பொ­ழுது  என்­னுடைய குடும்ப
நண்­ப­ரா­கவே மாறி­விட்­டார்.அவர் பிக்பாஸ் வீட் ­டிற்குள் செல்லும்­போதே என்­னி­டம் சொல்­லிவிட்­டுத் தான் போனார்.
இன்­றைக்கு நான் இந்த நிகழ்ச்­சிக்கு வந்­ததற்கு முக்­கிய கார­ணமே, என்­னு­டைய நெருங்­கிய நண்­பர்­கள் அழைத்­ததால்தான்.
நான் பிக்பாஸ்நிகழ்ச்­சியை பார்ப்­பது கிடை­யாது. சமீ­பத்­தில்என் நண்­பர்ஒரு­வர்,ஒரு வீடி­யோவை காட்டி,இதை தயவு செய்து பாருங்­க­ளேன் என்று என்­னி­டம்காட்­டி­னார்.
அதில் நான் பெரி­தும் ம தி க் ­கு ம் இயக்குநர் ­சேரனை,ஒரு­வர் (நடி­கர் சர­வ­ணன்)ஒரு­மை­யில்திட்­டு­கி­றார்.இன்னொரு பெண்,(மீரா­மி­துன்) அவர் என்னை தப்பான இடத்­தில் தொட்­டார் என்று புகார் சொல்­கி­றார்.இதைக்­கேட்டு துடித்­துப்­போன சேரன் கண்­ணீர்வடிக்­கி­றார்.
இதையெல்லாம்பார்த்தபோது எனக்­குள் ஆத்­தி­ரம் பொங்­கு­கி­றது.மக்­கள் அனை­வ­ரும்,இப்­பொ­ழுது பிக்­பாஸ்நிகழ்ச்­சிக்கு அடி­மை­யா­கி­விட்­டது போல தெரி­கி­றது.ஆனால், பிக்­பாஸ் நிகழ்ச்­சி­
யைப் பற்றி பேசப்­பேசஎனக்­குள் கோபம் கொப்­ப
ளிக்­கி­றது.
அதி­லும் சேரன் சம்­பந்­தப்பட்ட காட்­சி­க­ளைப் பற்றிசொல்­லும் போதுஎன் மனம்அப்படியே
துடித்­துப்­போ­கி­றது.
நான் நினைத்­தால் பிக்­பாஸ்
ஸ்டுடியோவை,அடித்துநொறுக்கி போட்­டு­விட்டு சேரனை அழைத்­துக்­கொண்டு வர­மு­டி­யும்.ஆனால் நான் அதைச் செய்­யா­மல்அமைதிகாக்­கி­றேன்.எனக்கு பிடிக்­காத ஒருநிகழ்ச்சி உள்­ள­தென்றால் அது நிச்­ச­ய­மாக பிக்­பாஸ் நிகழ்ச்சி தான்” என ஆவேசமாக பேசி இருக்கிறார்
அமீர் என்றாலே போலீசார் கண்கொத்திப் பாம்பாக அலைவார்கள். 
அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ?
ameerbiggbosscheran