கமல்ஹாசன், டி சிவா ,நவீன் ஆகியோர் மீது மீரா மிதுன் கடும் குற்றச்சாட்டு!

 

தமிழ்ச்சினிமாவில் தகராறு பிடித்த நடிகை யார் என்றால்  மீரா மிதுனைத்தான்  கை காட்டுகிறார்கள்.போலீஸ் கேஸ் வரை போன புண்ணியவதி.

தற்போது சிவகார்த்திகேயன் மீது முதல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

“நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் என்னுடைய சீன்களை வெட்டி விட்டார்” என பழி போட்டிருக்கிறார்.

அடுத்த குற்றச்சாட்டு உலகநாயகன் கமல்ஹாசன் மீது !

“தமிழ்ச்சினிமாவில் வேண்டியவர்களுக்கு, சொந்தங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிற நெபோடிசம் பரவி இருக்கிறது. அக்னிச்சிறகுகள் படத்தில் என்னை தூக்கிவிட்டு தன்னுடைய மகளை  போடச்செய்திருக்கிறார் கமல்ஹாசன் .டைரக்டர் நவீனும் தயாரிப்பாளர் டி.சிவாவும் இரட்டை வேடம் போடுகிற ஆள்களாக இருக்கிறார்கள்.” இப்படி கடுமையான குற்றங்களை வைத்திருக்கிறார் மீரா மிதுன். 

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் நவீன் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். 

“நாங்கள் அக்ஷரா ஹாசனை நியமித்தது ஷாலினி பாண்டேவுக்குப் பதிலாகத்தான்.! நாங்கள் மீரா மிதுனை லீட் ரோலுக்கு கன்சிடரே பண்ணவில்லை. .அப்புறம் எப்படி நீக்க முடியும். அவராக சொல்லிக் கொண்டு திரிகிறார் “

கமல்குற்றச்சாட்டுடி.சிவாநவீன்மீரா மிதுன்