ரஜினிகாந்துக்கு விஜயசாந்தி அரசியல் அட்வைஸ் !

நடிகை விஜயசாந்தியை அவ்வளவு எளிதில் யாரும்  மறக்க முடியாது.

ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் வாழ்ந்த இடம் சென்னைதான். இங்குதான் அவர் பதிவுத் திருமணமும் செய்து கொண்டார். அன்றைக்கு இவரது மானேஜராக இருந்த ஏ.எம்.ரத்தினம் இன்று பிரபல தயாரிப்பாளர். விஜயசாந்தியின் பதிவுத் திருமணத்தில் சாட்சி கையெழுத்து போட்டவர்களில் இவரும் ஒருவர்.

சரி ,அந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.

விஜயசாந்தியின் திருமணம் ரகசியம் காக்கப்பட்டது. தேவி வார இதழில்தான் முதல்முறையாக திருமணச்செய்தி சான்றுடன் வெளியாகியது.

தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தவர் ஆந்திரம் திரும்பிய பின்னர் அரசியலில் ஈடுபட்டார். 13 ஆண்டுகள் தமிழ் -தெலுங்கு எந்த மொழியிலும் நடிக்கவில்லை. இப்போதுதான் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.மகேஷ்பாபு படம்.

13 ஆண்டு  வனவாசத்துக்கு என்ன காரணம் ?

சிரிக்கிறார்.

” அரசியல் சார்,  அரசியல்! இதன்  காரணமாதான்  வரல.   தனித் தெலுங்கானா வேணுமுங்கிறது என்னோட ஆசை.! அதுக்காக நான் கடுமையாக போராடிக் கொண்டிருந்தேன் .அதுல எடுத்த முயற்சியை நான் நிறுத்த விரும்பல ஏன்னா அரசியல் பாதி சினிமா பாதின்னு இருக்க விரும்பல.  சினிமாக்காரங்க சினிமாவிலதான்  தான் இருக்கணும் அரசியல்வாதிகள்  அரசியல்ல  தான் இருக்கணும் . அதனால நான் சினிமாவை மறந்து இருந்தேன். ( நம்ம சூப்பர் ஸ்டாருக்கு சொல்ற அட்வைஸ் மாதிரியா இல்ல?)

 ஆனாலும் என்னை மக்கள் மறக்கல .இப்பவும் அவர்கள்  என்னை மிகவும் நேசிக்கிறாங்க.  என்னுடைய படத்தினுடைய கேரக்டர்களின் பெயர்களைச் சொல்லி என்னை நினைவு படுத்துறாங்க . சந்தோஷமா இருக்கு!
 நான் அரசியலில் முழு மனசோட இருந்தேன் எனக்கு அது திருப்தியா இருந்தது !
“சரி இப்ப எதுக்கு சினிமாவுக்கு திரும்பி வந்திருக்கீங்க?”
“மகேஷ்பாபு  கூப்பிட்டார். நான்  மகேஷ்பாபுவின் அப்பா கிருஷ்ணாவின் படத்தில்தான் கதாநாயகியாக  நடித்தேன் . என்னுடைய சினிமா உலகம் அங்கதான் ஆரம்பம்.  அதனால அவரோட  மகன் மகேஷ்பாபுவுடன் ந டிப்பதற்கு  ஒத்துக்கொண்டேன். இந்த தெலுங்கு படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என்னை  ஆச்சரியப்பட வைக்கிறது. எனக்கு  முக்கியத்துவம் உள்ள படங்களில்மட்டும்தான் நடிப்பேன்”என்கிறார் விஜயசாந்தி.
 
சின்ன வயது மகேஷ்பாபு விஜயசாந்தி படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அரசியல்தெலுங்கானாமகேஷ்பாபுரஜினிகாந்த்விஜயசாந்தி