
நடிகை விஜயசாந்தியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது.
ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் வாழ்ந்த இடம் சென்னைதான். இங்குதான் அவர் பதிவுத் திருமணமும் செய்து கொண்டார். அன்றைக்கு இவரது மானேஜராக இருந்த ஏ.எம்.ரத்தினம் இன்று பிரபல தயாரிப்பாளர். விஜயசாந்தியின் பதிவுத் திருமணத்தில் சாட்சி கையெழுத்து போட்டவர்களில் இவரும் ஒருவர்.
சரி ,அந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.
விஜயசாந்தியின் திருமணம் ரகசியம் காக்கப்பட்டது. தேவி வார இதழில்தான் முதல்முறையாக திருமணச்செய்தி சான்றுடன் வெளியாகியது.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தவர் ஆந்திரம் திரும்பிய பின்னர் அரசியலில் ஈடுபட்டார். 13 ஆண்டுகள் தமிழ் -தெலுங்கு எந்த மொழியிலும் நடிக்கவில்லை. இப்போதுதான் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.மகேஷ்பாபு படம்.
13 ஆண்டு வனவாசத்துக்கு என்ன காரணம் ?
சிரிக்கிறார்.
” அரசியல் சார், அரசியல்! இதன் காரணமாதான் வரல. தனித் தெலுங்கானா வேணுமுங்கிறது என்னோட ஆசை.! அதுக்காக நான் கடுமையாக போராடிக் கொண்டிருந்தேன் .அதுல எடுத்த முயற்சியை நான் நிறுத்த விரும்பல ஏன்னா அரசியல் பாதி சினிமா பாதின்னு இருக்க விரும்பல. சினிமாக்காரங்க சினிமாவிலதான் தான் இருக்கணும் அரசியல்வாதிகள் அரசியல்ல தான் இருக்கணும் . அதனால நான் சினிமாவை மறந்து இருந்தேன். ( நம்ம சூப்பர் ஸ்டாருக்கு சொல்ற அட்வைஸ் மாதிரியா இல்ல?)












