“ஆங்கிலப் படம் எடுப்பது ஈஸி. தமிழ்ப் படம் எடுப்பது சிரமம்.!” -ஜீவா

பிரபலமான தயாரிப்பாளரின் பிள்ளை கூப்பிட்டாலும் சரி எல்லா நடிகர்களும் ஒரு விழாவுக்கு வந்து விடுவதில்லை. 

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அழைப்பவர்களினால் தங்களுக்கு ஆதாயம் இருக்கும் என்று நம்பினால் மட்டுமே ஆஜர் ஆவார்கள்.

அப்படித்தான் சூப்பர் குட் பிலிம்ஸ் முதலாளி ஆர்.பி.சவுத்ரியின் மகன் ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கிற ‘மிரட்சி ‘படத்தின் விழாவும் ஆகிப் போனது.

டேக் ஓ.கே கிரியேஷன்சின்  படம் ‘மிரட்சி’.  ரமேஷ்  வில்லனாக  நடித்திருக்கிறார் .எம்.வி. கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார்.

மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் ,நாயகி ஹீனா ஸஹா,இசை அமைப்பாளர் ஆனந்த் இயக்குநர்  கிருஷ்ணா ஆகியோர் பேசினார்கள்.

ஜித்தன் ரமேஷ் பேசுகையில்  “இந்த விழாவிற்கு நிறைய ஆர்ட்டிஸ்ட்களை  கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால்  வரவில்லை.பிசியாக இருந்திருக்கலாம்.ஆனால் என்னுடைய  தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான் கூப்பிட்டேன். வந்துவிட்டார். அவருக்கு நன்றி. வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.”என்றார் .

ஜீவா பேசுகையில் ,”இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவில் உங்களை சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது. இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு ‘டர்’ ஸ்டைலில் ஷாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும். 
ஆடியன்ஸ் முன்பெல்லாம்  அவ்வளவு   வெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது.”என்றார் 
ஜித்தன் ரமேஷ்ஜீவாமிரட்சிராஜன்