பிரபலமான தயாரிப்பாளரின் பிள்ளை கூப்பிட்டாலும் சரி எல்லா நடிகர்களும் ஒரு விழாவுக்கு வந்து விடுவதில்லை.
ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அழைப்பவர்களினால் தங்களுக்கு ஆதாயம் இருக்கும் என்று நம்பினால் மட்டுமே ஆஜர் ஆவார்கள்.
அப்படித்தான் சூப்பர் குட் பிலிம்ஸ் முதலாளி ஆர்.பி.சவுத்ரியின் மகன் ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கிற ‘மிரட்சி ‘படத்தின் விழாவும் ஆகிப் போனது.

மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் ,நாயகி ஹீனா ஸஹா,இசை அமைப்பாளர் ஆனந்த் இயக்குநர் கிருஷ்ணா ஆகியோர் பேசினார்கள்.
ஜித்தன் ரமேஷ் பேசுகையில் “இந்த விழாவிற்கு நிறைய ஆர்ட்டிஸ்ட்களை கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால் வரவில்லை.பிசியாக இருந்திருக்கலாம்.ஆனால் என்னுடைய தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான் கூப்பிட்டேன். வந்துவிட்டார். அவருக்கு நன்றி. வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.”என்றார் .