நம்மை சுரண்டிவருவது திராவிட கட்சிகளே !உலகநாயகன் பளீர்.!!

அரசியல் களம் அக்கினி நட்சத்திர வெயில் மாதிரி காஷ்மீரில்  இருந்து கடைக்கோடி கன்னியாகுமரி வரை தகிக்கிறது. 

400 ரூபா கொடுத்து கியாஸ் சிலிண்டர் வாங்கிய காலம் போய் விட்டது. பாஜக ஆட்சியில் 1000 ரூபா கொடுத்து அழ வேண்டியதாக இருக்கிறது என்று இல்லத்தரசிகள் கண்ணீர் வடித்து கணவன்மார்களின் பாக்கெட்டுகளை சுரண்டுகிறார்கள்.

கலவரம் வந்து விடுமோ என்கிற பயம் வேற.!

இவர்களுக்கிடையில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தடாலடியாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

ஏய் மக்கா..நம்ம புள்ளைகுட்டிகள்னு ஒவ்வொருத்தர் மீதும் கடன் சுமை இருக்குப்பே.! பொறக்கப்போற குழந்தையும் கடனாளியாத்தான் இருக்கும் என்று நம்ம தலைவிதி பற்றி சொல்கிறார்.

காதலர் தினமான நேற்று அவர் தனது டிவிட்டர் கணக்கில் வரவு வைத்துள்ள செய்தியை படியுங்கள்.திராவிட கழகங்களின் சுய ரூபம் இதுதான்வே என செவிட்டில் ஆராய்ந்திருக்கிறார்.

“தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே. இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும். “என உலகநாயகன் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

கமல்ஹாசன்திராவிட கட்சிகள்மக்கள் நீதி மய்யம்