தமிழ்நாட்டில் நாளை முதல் மூடப்படுகிறது சினிமா தியேட்டர்கள்.!

ஒவ்வொரு வாரமும் நாலைந்து திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படுவது வாடிக்கை.

வெள்ளி,சனி ஞாயிறு என குறைந்த பட்ச நாட்களில்  மட்டுமே அந்த படங்களுக்கு உயிர்த் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

பெரிய படங்கள் வருமேயானால் சின்னப்படங்களின் குரல்வளை அநியாயத்துக்கு அறுக்கப்பட்டுவிடுகிறது..

இந்த நிலையில் இயற்கையின் சதியாக கொரானா வைரஸ் படையெடுத்திருக்கிறது.

நாளை முதல் 16 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுமையுமாக தியேட்டர்கள் மூடப்படுகின்றன என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.

மர்ஜுவானா,புறநகர் ,கன்னிராசி ,ஞானச்செருக்கு,காவல்துறை உங்கள் நண்பன் ,காக்டெயில் ,பல்லுப்படாம பாத்துக்க ஆகிய படங்களின் திரையிடல், இன்றைய தகவல் உண்மையானால் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகப்போவதில்லை..

மீண்டும் திரையிடல் என்பது இந்த படங்களுக்கு பெருத்த கண்டமாகவே இருக்கும். அன்றைய நாளில் வெளிவரக்கூடிய படங்களுக்கு முன்னுரிமை வழங்குவார்களே  தவிர பின்தங்கிவிட்ட அதாவது அரசு ஆணையினால் தங்கி விட்ட படங்களுக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை.

கொரானாவைரஸ்தியேட்டர்கள் மூடல்