‘காதலா , காதலா ….காதலில் தவிக்கிறேன்’-கொரானா பிரித்த ஹீரோ,ஹீரோயின்.!

“காதலா..காதலா ,காதலில் தவிக்கிறேன்,

ஆதலால் வா..வா.அன்பே அழைக்கிறேன்” என்று அவ்வை சண்முகியில் நடிகை மீனா உருகி உருகி கமல்ஹாசனை அழைப்பார்.

அதைப்போல் கொரானா கொள்ளை நோயினால் ஒரு காதல்ஜோடி பிரிவினையில் தவித்துக் கிடக்கிறது.

 நடிகர்  விஷ்ணு விஷாலின்  காதலி பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. விஷ்ணு மண விலக்குப்பெற்று  மனைவி ரஜினியை பிரிந்து காதலியின் நினைவுடன் வாழ்கிறவர் .

மணமுறிவுக்கு காரணமே காதலி ஜூவாலா தான் என சொல்லப்பட்டது. விஷ்ணு ,ஜூவாலா  இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

தனது சமூக வலைத்தளத்தில், சில புகைப்படங்களை பதிவு செய்து அதில், ’விஷ்ணுவிஷாலை ரொம்பவே மிஸ் செய்வதாக ஜூவாலா வருத்தப்பட்டிருந்தார். 

.காதலியின் பதிவை பார்த்து  மனம் படபடக்க நடிகர் விஷ்ணு விஷாலும் தனது பதிலாக  ’இப்போது பிரிந்து இருப்பது பரவாயில்லை. ஆனால் தற்போது சமூக இடைவெளி மிகவும் முக்கியம். அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்’ என்று கூறி இருக்கிறார்.

காதல்ஜூவாலா கட்டாவிஷ்ணு விஷால்