ஊரடங்கை தளர்த்த நடிகர் பார்த்திபன் கடும் எதிர்ப்பு !

 

தமிழகம் உள்பட இந்தியாவில் மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி முதல் ஒருசில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்

.”ஊரடங்கை தளர்த்த வேண்டாம். மக்கள் மே 3 வரை மனரீதியாக எதிர்கொள்ள தயாராகி விட்டார்கள், இப்படியே இருக்கட்டும். வேண்டுமானால் மிக அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் சில விஷயங்களை கையில் எடுங்கள். ஐடி போன்ற நிறுவனங்களுக்கு தளர்த்த வேண்டாம். 50 பேர் வேலைக்கு செல்கிறார்களா? 500 பேர் வேலைக்கு செல்கிறார்களா? என்று எப்படி தெரியும்.

இன்னும் நாம் 3ம் கட்டத்திற்கு செல்லவில்லை. அப்படி நாம் சென்றால், அமெரிக்காவை கூட காப்பாற்றி விடலாம் இந்தியாவை காப்பாற்றவே முடியாது “என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறியதாக நடிகரும் இயக்குனருமான  பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சிலகாலமாக காணாமல் போயிருந்த விஜயபாஸ்கர் தலை தற்போதுதான் தொலைக்காட்சிகளில் தெரிகிறது.

ஊரடங்குரா.பார்த்தீபன்விஜயபாஸ்கர்