விஜய் புதிய படம்! முக்கிய தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

,துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துப்பாக்கி படத்தின் புகைப்படங்களை இணைத்து  பதிவிட்டிருந்ததார்.

பரபரப்பு ஸ்டார்ட் ஆனது .! எதோ ஒரு விஷயம் அதில் மறைந்திருக்கிறது என பேச ஆரம்பித்தார்கள்.  துப்பாக்கி படத்தின் 2 ம்  பாகம் உருவாகவிருப்பதைத் தான் அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பதாக சொன்னார்கள். ,

மீண்டும் சந்தோஷ் சிவன் -விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைய இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து ஏ,ஆர்.முருகதாஸ் வட்டாரத்திடம் கேட்ட போது , இது அதே பாணியிலான  வேற ஒரு கதை என்றனர்

. தற்போது  இதை உறுதி படுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தற்காலிகமாக  ‘தளபதி 65’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் கூறுகையில்,”இப்படம் துப்பாக்கி படத்தின் 2 ம் பாகம் அல்ல,முற்றிலும் மாறுபட்ட புதிய ஸ்கிரிப்ட்” என்கிறார். இப்படத்தின்  திரைக்கதையை முற்றிலும் முடித்து விட்ட ஏ.ஆர்.முருகதாஸ் அதை மேலும் மெருகேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.

ஏஆர் முருகதாஸ்தளபதி 65விஜய்