பா.விஜய்யின் இயக்கத்தில் அர்ஜூன் -ஜீவா இணைகிறார்கள்,!

அர்ஜூன் -ஜீவா இருவரும் இணைந்து முதன்முதலாக நடிக்கப்போகிற படம்தான் ‘மேதாவி.’

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில்  சு.ராஜா  3 வதாக தயாரிக்கிற படம்.  இயக்குநர் பாடலாசிரியர் பா.விஜய்.

ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன்,ராதாரவி, ஒய்.ஜி . மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி“கைதி”  தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா  ஆகியோர்  நடிக்கிறார்கள் .

யுவன் சங்கர் ராஜா  இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்  இயக்குநர் பா.விஜய் 

அர்ஜூன்ஜீவாபா.விஜய்மக்களரசன் பிக்சர்ஸ்யுவன்சங்கர்ராஜா