ஸ்டெர்லைட் நச்சுஆலையை மூடச்சொல்லி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் பயங்கரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் .மக்களை அடித்து நொறுக்கினார்கள்.
“மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று.
சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.”