பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கும் பிரபல நடிகர்.!

தேசிய பேட்மிண்டன் வீராங்கனையும், சர்வதேச அளவில் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டவருமான வர்ஷா பெலவாடி,காதல் கல்யாணம் செய்யப்போகிறார்.

பிரபல கன்னட நடிகர் வினாயக் ஜோஷிதான் இவரது காதலர் .

நடிகர் வினாயக் ஜோஷி தங்களது காதல் அனுபவத்தை கூறினார்.

 ‘வர்ஷாவை தனக்கு சிறுவயதில் தெரியும் என்றாலும், அவருடன் கடந்த 25 வருடங்களாக தொடர்பில் இல்லை.

அதன்பின் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரால் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் நட்பானோம் .

இந்த நட்பு நாளடைவில் காதலாகி மாறி,தற்போது,  இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம்  பேசி முடிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.

கன்னடத்  திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் வினாயக் ஜோஷி .

காதல் திருமணம்வர்ஷா பெலவாடிவிநாயக் ஜோஷி