திரிஷாவை மிரட்டுகிறார் கவர்ச்சி நடிகை.!

இந்த பெண்ணுக்கு இதுவே வேலையாகிப்போச்சுங்க!

கண்ணு கூசுகிற அளவுக்கு கவர்ச்சிப்படங்களை போட்டு சாவடிக்கிது. இல்லேன்னா “என்னை முதலமைச்சர் ஆக்குங்க .லஞ்சத்தை ஒழிச்சு காட்டுறேன்னு பிரதமர் ஆபிசுக்கு டிவீட் பண்ணுது. இப்படி ஏடாகூடமாக ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கு. பேசாமல் வனிதா விஜயகுமார் கிட்ட அனுப்பி வச்சா என்னன்னு கூட தோணுது .!

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாகவே நடித்து வருகிறவர் திரிஷா.

சமீபத்தில் உடல்பயிற்சி செய்த கையோடு  வியர்வை சொட்ட சொட்ட புகைப்படம் ஒன்று  வெளியாகி இருந்தது. அது வழக்கம் போலவே அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது.

இப்புகைப்படத்தைப் பார்த்த சர்ச்சை நடிகையான மீரா மிதுன்,திரிஷாவுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார் . திரிஷா புகைப்படம் குறித்து மீராமீதுன்,” நான் ஏற்கனவே இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன். அதை அப்படியே காப்பியடித்து திரிஷா இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ,மேலும் இதோட நிறுத்திக்கலாம் . உனக்கு கடைசி வார்னிங். இனிமே நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என தனது வலைதளத்தில், திரிஷாவை மிரட்டும் வகையில்  பதிவிட்டுள்ளார்.

இதுக்கு முன்னாடி தளபதி விஜய் தன்னைப்பார்த்து காப்பி அடிக்கிறார் என்பதாக சொல்லி வாங்கி கட்டிக்கொண்டவர்தான் இந்த மீரா மிதுன்.தாங்க முடியலைங்க,!

திரிஷாமீராமீதுன்