இதைப்பற்றிய தன்னுடைய கருத்தினை நடிகை பூ பார்வதி வெளியிட்டிருக்கிறார். இவர் மலையாளம் தமிழ் உள்ளிட்ட சில மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக அக்கறை இருக்கிறவர் . இவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
“இயற்கைபடர்ந்துள்ள காடுகள் ,மலைகள் ,ஏழை மக்கள் அவர்களது வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சட்ட வரைவினால் மனித உரிமை சார்ந்த விஷயங்கள் கேலிக்கூத்தாகிவிடும் “என்று தெரிவித்துள்ளார்.
“உங்களுக்கு புரியும் வகையில் எதிர்ப்பு கடிதத்தை நான் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். மக்களுக்கு புரியும் இந்திய மொழிகளில் இந்த வரைவை நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்பதையும் சுட்டுக்காட்ட விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.