காடுகள் அழிக்கப்படும் ,மலைகள் உடைக்கப்படும் ,காட்டு மிருகங்கள் ஒழிக்கப்படும். ஏழைகள் வாழ்க்கை நசுக்கப்படும் என்கிற அச்சத்தினால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 மீது பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த புதிய சட்டம் பற்றிய அறிக்கை இந்தியைத் தவிர ஏனைய மாநில மொழிகளில் வெளிவரவில்லை.
இதைப்பற்றிய தன்னுடைய கருத்தினை நடிகை பூ பார்வதி வெளியிட்டிருக்கிறார். இவர் மலையாளம் தமிழ் உள்ளிட்ட சில மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக அக்கறை இருக்கிறவர் . இவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
“இயற்கைபடர்ந்துள்ள காடுகள் ,மலைகள் ,ஏழை மக்கள் அவர்களது வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சட்ட வரைவினால் மனித உரிமை சார்ந்த விஷயங்கள் கேலிக்கூத்தாகிவிடும் “என்று தெரிவித்துள்ளார்.












